தமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…
ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான பனிப்பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அன்டார்டிக்கா பனிப்பாறையின் ஆழமான பிரதேசத்தின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பூமி பனிக்காலத்தை அடைகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான மாற்றம் இடம்பெறுவதில்லை. ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 40000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பனிக்காலம் உருவானதாகவும், தற்போது இந்த வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை.
புவியின் சுழற்சி வேகத்தின் அடிப்படையில் கால மாற்றம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டுக்கு முன்னர் கால மாற்றம் ஏற்பட்ட இடைவெளிக்கும் தற்போதைய இடைவெளிக்கும் இடையிலான வேறுபாட்டுக்கான காரணம் இன்னமும் புரியாத புதிராக தொடர்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புவியின் சுழற்சி மற்றும் கால மாற்றங்களுக்கான காரணிகளை உரிய முறையில் கண்டறிந்தால் மட்டுமே காலநிலை மாற்றங்கள் தொடர்பில் கண்டறிய முடியும் என தெரிவிக்கின்றனர். சுற்றாடலில் காபனீரொட்சைட்டின் செறி அதிகரித்துள்ளமை மற்றும் பச்சை வீட்டு விளைவு ஆகியவற்றினால் சில வேளைகளில் இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் ஊகம் வெளியிட்ட போதிலும் உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதற்கு பண்டைய கால காலநிலை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்கள் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னய பனிப்பாறைகளை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவும் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள போதிலும் கண்டு பிடிக்க முடியும் என சில ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…