குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றில் உதயங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கவும், வங்கிக் கணக்கு முடக்கத்திற்கு எதிராகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் டுபாயில் வைத்து உதயங்க கைது செய்யப்பட்ட போதிலும், இலங்கையிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்தநிலையில் உதயங்கவிற்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.