இலங்கை பிரதான செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கொரிய மாநாட்டுக்கு இலங்கை வாழ்த்து


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ள கொரிய மாநாட்டுக்கு இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. வட கொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதி வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரவேற்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனநாயக வழியில் ராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ள இலங்கை பேண்தகு சமாதானமும் சுபீட்சமும் கொரிய தீபகற்பத்தில் ஏற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.