Home இலங்கைபிரதி சபாநாயகர் இன்றி பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் – சபாநாயகர்

பிரதி சபாநாயகர் இன்றி பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் – சபாநாயகர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதி சபாநாயகர் ஒருவர் இன்றி பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். விரைவில் பிரதி சபாநாயகர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதிக்கு இது குறித்து ஏற்கனவே தாம் அறிவித்துள்ளதாகவும் எனினும் இதுவரையில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக செயற்படக்கூடிய யார் பிரதி சபாநாயகர் பதவியில் அமர்த்தப்பட்டாலும் தமக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More