Home இலங்கைஇராணுவத்தால் கொல்லப்பட்டு, மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர்…

இராணுவத்தால் கொல்லப்பட்டு, மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வின் இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மிருசுவில் புனித நிக்கலஸ் தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி இராணுவத்தினரால் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டு மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் க.வாமதேவன், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More