182
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்தில் அமெரிக்கா திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தூதரகம் திறந்து வைக்கப்படுவதற்கு பலஸ்தீனம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் நடைபெறவுள்ள தூதரக அங்குரார்ப்பண நிகழ்வுகளில் அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் புதல்வி இவான்கா மற்றும் அவரது கணவர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். தற்போதைக்கு சிறிதாக இந்த தூதரகம் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love