Home இலங்கை முத்­தை­யன்­கட்­டில் தினேஸ்­கு­மாரின் உயிரை பலியெடுத்த மின்னல்…

முத்­தை­யன்­கட்­டில் தினேஸ்­கு­மாரின் உயிரை பலியெடுத்த மின்னல்…

by admin

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­த  சம்­ப­வம் ஒன்று நேற்று முல்­லைத்­தீவு, முத்­தை­யன்­கட்­டில் இடம்பெற்றுள்ளது.  முத்தையன் கட்டு  இட­து­கரை அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யில் தரம் 9 இல் கற்­கும் 14 வயதுடைய  பி.தினேஸ்­கு­மார் என்ற மாண­வரே உயி­ரி­ழந்­துள்ளார். நேற்­றுப் பாட­சா­லை­யி­லி­ருந்து சென்ற தினேஸ்­கு­மார் உணவு உண்ண சமை­யல் அறை­யில் உணவை எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். அப்­போது மின்­னல் தாக்­கி­யதாக கூறப்பட்டுள்ளது.

அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் தினேஸ்­கு­மார் ஒட்­டு­சுட்­டான் மருத்­து­வ­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டு பின்  அங்­கி­ருந்து மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.  எனி­னும்  அந்த மாணவர் உயி­ரி­ழந்­தார் என மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்த மாண­வ­னின் தந்தை போரில் உயி­ரி­ழந்­துள்­ளார். வறு­மைக் கோட்­டின் கீழ் வாழ்ந்த இந்த மாண­வ­னுக்கு பாட­சாலை நிர்­வா­கத்­தின் உத­வி­யு­டன் அண்­மை­யிலேயே துவிச்­சக்­கர வண்டி ஒன்று வழங்­கப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முத்­தை­யன்­கட்டு, ஜீவ­ந­க­ரில் மின்­னல் தாக்­கம் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்­ளது என்று என்று பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர். நிலை (ஏத்) கோபு­ரம் இல்­லா­ததே அதற்­குக் கார­ணம் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More