168
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16.05.18) பத்தரமுல்லவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது.
உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார்.
கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார்.
Spread the love