குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கு தெரிந்தே விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கில் இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கும் போது தெற்கில் அமைச்சர்கள் படையினரை அவமதித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.
நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த படையினரை நினைவுகூர நாடாளுமன்றத்தில் மூன்று கொட்டகைகளை மாத்திரம் அமைத்து கலாசார கண்காட்சியை மாத்திரம் நடத்த தயார்ப்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
பொரள்ளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சிசிர ஜயகொடி, திலும் அமுனுகம ஆகியோர் கருத்து வெளியிட்டதுடன் இலங்கை படையினருக்கும் ராஜித சேனாரத்னவின் காட்டுப்படையினருக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
படையினரால் சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நியாயப்படுத்தி அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ள கருத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடா என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர