ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது . குறித்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் படுகாயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலிலும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது