2
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண கொடி அலுவலக நேரத்திற்கு பின்னர் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினம் அனுஸ்டிக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் கோரி இருந்தார்.
அந்நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் வடமாகாண பேரவை செயலகத்தில் வடமாகாண கொடி முழுக்கம்பத்தில் பறந்து கொண்டு இருந்தது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தி தொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண பேரவை செயலக அலுவலக நேரம் காலை 8.30 மணிக்கே. அதனாலயே காலையில் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட முடியவில்லை. அலுவலக நேரத்திற்கு அலுவலக உத்தியோகஸ்தர்கள் வந்த பின்னர் காலை 8.30 மணிக்கு மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு , துக்க தினமும் அனுஸ்டிக்கப்பட்டது என தெரிவித்தார்.