தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற நிகழ்ச்சி திட்டம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தேசிய சமாதான பேரவையால் மாவட்ட ரீதியாக இடம் பெற்று வரும் ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொனிப்பொருளில் இடம் பெற்று வரும் விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று சனிக்கிழமை(19) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதன் ‘மன்னார் ஊடக உப குழு அணியினர்’ ஏற்பாடு செய்த பாடசாலை மட்டத்திலான விவாதப்போட்டி மற்றும் பரிசலிப்பு நிகழ்வு நேற்று (19) சனிக்கிழமை மாலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது. இதே வேளை பெண்களை மையப்படுத்தி ‘தந்தையுமானாள்’ எனும் ஆவணப்படமும் வெளியீடு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,மன்னார் நகர சபை உறுப்பினர் யோசப் தர்மன், சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் அதிபர் தனேஸ்வரன், பேசாலை முருகன் கோவில் குருக்கள் மகா சிறி தர்மகுமார குருக்கள் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் nடோசன்,ஓபன் நிறுவனத்தின் இணைப்பாளர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப்போட்டிகள் இடம் பெற்றது.
வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வெற்றி கேடையம்,சான்றிதல் மற்றும் பதக்கம் என்பன விருந்தினர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.