குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மடுரோ மீளவும் வெற்றியீட்டியுள்ளார். இந்தநிலையில் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு மடுரோ வெனிசுலாவின் ஜனாதிபதியாக கடமையாற்றவுள்ளார். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு சர்ச்கைகளுக்கு மத்தியில் இந்த தேர்தலில் மடுரோ வெற்றியீட்டியுள்ளார்.
உணவுத் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மடுரோ தேர்தலில் வெற்றியிட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 46 வீதமான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்ற அதேநேரம் தேர்தலில் பிரதானமாக மடுரோவை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரி பெல்கோன் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.இந்த தேர்தல் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது