குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பயன்படுத்திய பொருட்களை ஒன்று திரட்டி, அவற்றை வடக்கு சிறுவர் சிறுமியருக்கு காண்பிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இதற்கான காட்சிகூடமொன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த மக்கள் பற்றிய நினைவுகளை எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால் புலிகளின் பொருட்களை காட்சிப்படுத்தும் சாட்சிகூடமொன்றை உருவாக்குவது குறித்த பிரேரணை ஒன்று, எதிர்வரும் வாரத்தில் வட மகாhணசபைகளில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.