185
பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை நிலவுவதன் அங்கு கடந்த 3 நாட்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளதாகவும் மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட மேயர் வசீம் அக்தர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Spread the love