குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மண்ணெண்ணை விற்பனை 400 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் மண்ணெண்ணைக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து விலை உயர்வடைந்துள்ள நிலையில், பயன்பாடு பாரியளவில் குறைவடைந்துள்ளது.கைத்தொழில் தேவைகளுக்கு மண்ணெண்ணை அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளமை இதன் மூலம் நிரூபணமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு நுகர்வு வீழ்ச்சி பதிவாகியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வழங்கப்பட்ட மண்ணெண்ணை மானியம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் விலை உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.