194
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 28/05/2018ம் நாள் அன்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மூன்றாம் மாடிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவராக தற்போது கடமையாற்றும் இவர் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடாத்தி வருகின்றார்.
போரின்போது ஒரு காலை இழந்த நிலையில் வாழந்து வரும் இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மே 18ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலமை தாக்கியமை காரணமாகவே இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love