குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி, வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தமை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளமை தொடர்பிலோயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன்னுடன் எதிர்வரும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. இந்த நிலையில், பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ராம்ப் அறிவித்திருந்தார்.வடகொரியாவின் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடுகளினால் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதாக ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் நடவடிக்கைகளை பொறுமையுடன் வேடிக்கை பார்க்கப் போவதில்லை எனவும், அமெரிக்க ராணுவத்தினர் தயாராகவே இருக்கின்றார்கள் எனவும் ட்ராம்ப் குறிப்பிட்டிருந்தார். உலகின் மிகவும் பலம்பொருந்திய இராணுவம் அமெரிக்காவினுடையது எனவும் தேவை ஏற்பட்டால் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ்கவலை தெரிவித்துள்ளார்.