Home இலங்கைகிளிநொச்சியில் புதையல் தோண்டிய இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது…

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

புதையல் தோண்டுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் இந்தியா கேரளாவைச் சேர்ந்த மூவர் உட்பட ஏழுபேர் தர்மபுரம் காவற்துறையினரால் நேற்று வியாழக்கிழமை (24.05.18) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இவர்கள் கல்மடுவில் உள்ள காணி ஒன்றில் பூஜை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியா கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூவர் சிங்களவர், இவர்கள் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்றும் மற்றும் கொழும்பைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More