தூத்துக்குடியில் வன்முறையை தொடர்ந்து காவல்துறையினர் விதித்திருந்த 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் திகதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பேரணியாக சென்ற மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு காரணமாக இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது.தூத்துக்குடியில் தற்போது இயல்புநிலை திரும்புவதையடுத்து கடந்த 5 நாட்களாக அமுலில் இருந்த தடை உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எனவும் எனவே, 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாகவும் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது