இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏற்பட்ட தொடர் மின்னல்களால் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இங்கிலாநதில்; கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.லண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதுடன் மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும் விமானநிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love
Add Comment