151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
20ம் திருத்தச் சட்ட யோசனைக்கு ஆதரவளிக்கப்படாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 20ம் திருத்தச் சட்டம் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜே.வி.பியினால் கடந்த வாரம் 20ம் திருத்தச் சட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தேசியப் பாதுகாப்பு ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டுமெனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love