Home இந்தியாஎல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லையென இந்தியா – பாகிஸ்தான் உடன்பாடு

எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லையென இந்தியா – பாகிஸ்தான் உடன்பாடு

by admin

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை என இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய ராணுவத்தினரும் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இணைய தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More