குளோபல் தமிழ் செய்தியாளர்
யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு நாளை 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னரான பொழுதுகளுடன் 37 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் அந் நிகழ்வினை நினைவேந்தலை மேற்கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிவித்திலில்,
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது என்றும் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 01.06.2018 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்கு யாழ் பொதுநூலக முன்றலில் நடைபெறவுள்ளதாகவும் அனைவரையும் இந் நிகழ்வில் பங்குகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.