உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன்(Zinedine Zidane) பதவிவிலகியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரரான ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தநிலையில் இவரது பதவிக் காலத்தில் ரியல் மட்ரிட் அணி தொடர்ச்சியாக மூன்று சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியிருந்தது. லா லிகா தொடரிலும் ரியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவும் தான் விலகுவது தான் அனைவருக்கும் நல்லது எனவும் இதனால் பதவியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளர் பதவியை மேலும் நீடிக்க கோரியமை தனது தவறு எனவும் அணியில் மாற்றம் தேவைப்படுகின்றது எனவும் தான் பதவிவிலக இது தான் சரியான நேரம் எனவும் ஷிடேன் தெரிவித்துள்ளார்.