191
யாழ் அச்சுவேலி பகுதியில் நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணியில் ஒரு தொகுதி இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி இராச வீதியில் உள்ள 1.5 ஏக்கர் காணியே இவ்வாறு இன்று கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி இராச வீதியில் உள்ள பொதுமக்களின் 3 ஏக்கர் பொது காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் 1.5 ஏக்கர் காணி மீள கையளிக்கப்பட்டுள்ளது. மீதி 1.5 ஏக்கர் காணியும் இவ்வருட இறுதிக்குள் மீளக்கையளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love