இந்தியாவின் மேகலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கின் மாட்ரான் பகுதிகளில் ஒரு குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற வன்முறை மோதல்களளைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இதனால் லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு ஒன்று பேருந்து நடத்துனர் ஒருவரைத் தாக்கியதை அடுத்து மோதல் வெடித்துள்ளது எனவும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டும் அவர்கள் வெளியேறவில்லை எனவும் சாதாரண மோதல் வன்முறை கலவரமாக வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறையாளர்கள் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கலவரத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் பொதுமக்களில் நால்வரும் காயமடைந்துள்ள நிலையில் அங்கு ஊரட்ஙகுச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.