170
காங்கேசன்துறை கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டவர்களையும், இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தது.
இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும், இரண்டு பெண்கள், மற்றும் குழந்தை உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love