Home இலங்கைஅங்கஜன் இராமநாதன் வெளியே – சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே உள்ளே?

அங்கஜன் இராமநாதன் வெளியே – சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே உள்ளே?

by admin

பிரதி சபா­நா­யகர் தெரி­விற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இராமநாதன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே அந்த பத­விக்கு நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக  தகவல்கள் வெளியாக உள்ளன. இதேவேளை பிரதி சபா­நா­யகர் பத­விக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியும், கூட்டு எதிர்க்­கட்­சியும் தமது தரப்பில் எவ­ரையும் பரிந்­து­ரைப்­ப­தில்லை என முடிவு செய்துள்ளதாக  கூறப்படுகிறது.

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் தமிழ் – சிங்­கள புத்தாண்டு வாரத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார். இதன்போது பிரதமருக்கு எதிராக  வாக்­க­ளித்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­களின் ஒரு­வ­ரான முன்னாள் பிரதி சபா­நா­யகர் திலங்க சுமதிபால  தனது பதவியினை ராஜினாமாச்  செய்­தி­ருந்தார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் பெயர் ஆரம்­பத்தில் ஜனா­தி­ப­தி­யினால் பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­துடன் ஐக்கிய தேசியக் கட்­சியின் சார்பில் மொன­ரா­கலை மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் ஆனந்த குமா­ர­சி­றியின் பெயரும் கடந்­த­வாரம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த பாரா­ளு­மன்ற அமர்வுகளின்  போது கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட அங்­கஜன் இரா­ம­னா­தனை நிய­மிப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் சுயா­தீ­ன­மாக செயற்­படும் 16 பேர் கொண்ட அணி­யி­லி­ருந்து பாராளுமன்ற உறுப்­பினர் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளயை நிய­மிக்க தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.  அவ­ரையே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் நிய­மிக்க கட்­சி­யிலும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த அணியின்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸ்ஸநாயக்கா  தெரி­வித்­துள்ளார்.

இந்த நிலையில்  நாளை கூட­வுள்ள பார­ளு­மன்ற அமர்­வு­களின் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் சுதர்­ஷினி பெர்னாண்டோபுள்ளே பிரதி சபா­நா­ய­க­ராக தெரி­வு­செய்­யப்­ப­டுவார் என தெரிய வரு­கின்­றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More