Home இலங்கைபுலிகளுக்குச் சொந்தமான, 1500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், அரச உடமையாக்கப்பட்டன…

புலிகளுக்குச் சொந்தமான, 1500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், அரச உடமையாக்கப்பட்டன…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான, 1500 கோடி ரூபா பெறுமதியான அசையும், அசையாச் சொத்துக்கள், அரச உடமையாக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டுநாயக்கா வானூர்த்தி தளத்திற்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள நவீன அச்சகம், கொழும்பு கறுவாத்தாட்டத்தில் உள்ள (கொழும்பு 7) காணி, பல படகுத் தொகுதிகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை இவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவையாவும் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள், தேடுதல்கள், சுற்றி வளைப்புகள் மூலம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் அடையாளம் காணப்பட்டவை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடக்கு கிழக்கிலும், நாட்டின் பல பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அடையாளம் காண்பதில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளமையும், வடக்கில் பல அகழ்வுப் பணிகளைத் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More