150
file photo
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தபால் தொடரூந்தில் நேற்றிரவு பெண்ணொருவர் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். தொடரூந்தில் பிள்ளையை பிரசவித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
26 வயதான இந்த பெண், மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தாயும் பிள்ளையும் ஆரோக்கியமாக இருப்பதாக தம்புள்ளை வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love