Home இலங்கை புலிகளை போற்றியதற்காக ஒன்டாரியோ வேட்பாளர் மன்னிப்பு கோரினார்…

புலிகளை போற்றியதற்காக ஒன்டாரியோ வேட்பாளர் மன்னிப்பு கோரினார்…

by admin

தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

2009.emonstrators carry Tamil Tigers flags in downtown Toronto on Monday, March 16, 2009.

The Canadian Press/Christian Lapid

கனடாவின் ஒன்டாரியோ மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளை போற்றியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார். விஜய் தனபாலசிங்கம் என்ற வேட்பாளரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை போற்றும் வகையிலான விடயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தற்பொழுது தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். விஜய் தனபாலசிங்கம் கனடாவின் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில், விஜய் பதிவுகளை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More