விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்த 1981 தேர்தலே காரணம் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். அண்மையிர்அனுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு என்று கூறிய அவர் அதனை தேர்தல்களை சரியாக நடத்துவதன் மூலமே நிலை நாட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் பற்றி நினைவு கூர்ந்த தேசப்பிரிய1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் குறித்தும் நினைவுபடுத்தினார்.
யுhழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையங்களில் கொழும்பு, குருநாகல பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெளியாட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது மூலம் வாக்குப்பெட்டிகள் காணாமல்போக காரணமாயிற்று. பின்னர் சில வாக்குப் பெட்டிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
இதேவேளை அன்றைய தினமே யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இதுவே மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை உடைந்தது. வாக்குகளுக்குப் பதில் ரவைகள் என்ற நிலைக்கு அவர்கள் செல்ல வழியமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கு 1983 கலவரம் தான், காரணமானது என்று சிலர் கருதினாலும் அதற்கான காரணமே 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைத் தான் தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தலின் மீது நம்பிக்கையிழந்தனர். இது அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்த வழியமைத்தது. இதன் தொடர்ச்சியாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பொருத்தமற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களைப் பிற்போடுவது, மரணங்களையும், அழிவுகளையும் தான் கொண்டு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.