சிங்கப்பூரில் கேபெல்லா விடுதியில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வட கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் முதல்கட்டம் நிறைவடைந்து தற்போது இரண்டாவது கட்டப் பேச்சுவார்தைகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிங் ஜொங் உன்னும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் இடம்பெற்ற முதல்கட்ட சந்திப்பு நிறைவடைந்ததும் இருவரும் விடுதியின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப் வட கொரியா ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என கிம் ஜாங் உன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது இருவருக்குமிடையிலான இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கருதப்படுகின்றது.