155
ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை காவல்துறையினரை நோக்கி தீவரவாதிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதற்கு காவல்துறையினரும் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதன்போது குறித்த இரு காவல்துறையினரும் உயிரிழந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love