நீட் பரீட்சையில் மாணவர்கள் தற்கொலை செய்வதில் அரசை மாத்திரம் குறை சொல்லக்கூடாது என்று வழக்கு விசாரணை ஒன்றின்போது தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். நீட் பரீட்சையில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு அரசு தவறி விட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையின்போதே. நீதிபதி கிருபாகரன் இவ்வாறு கூறினார்.
குறித்த வழக்கை தலமை தாங்கி விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், நீட் பரீட்சை தற்கொலைகள் அரசியல் கட்சிகளால் அரசியல் ஆதாயமாக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பதாகவும் கூறிய அவர் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது என்றும் மேலும் தெரிவித்தார்.
எனினும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.