கொரிய தீபகற்பத்தில் ராணுவ ஒத்திகை கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் இருதரப்புக்குமிடையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்குகின்றன.
இந்நிலையில், கொரியா தீபகற்பத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வந்த ராணுவ ஒத்திகைகள் கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இ நேற்றையதினம் அறிவித்துள்ளனர். டிரம்ப் – கிம் சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தில் சுமார் 3 லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது