168
இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளுள் 10 ஆண்டுகள் வரை பழமையான வழக்குக்குளும் காணப்படுகின்றன.
எனவே கடந்த 10 ஆண்டு காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளின் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் வழக்குகள் தாமதம் ஏற்படதவாறு இருக்க சிறந்த பொறிமுறையொன்று அவசியம் என்றார்.
Spread the love