பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து பிரான்ஸ், குரோஷியா வெற்றி , அவுஸ்திரேலியா – டென்மார்க் சமனிலை

ரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் – டென்மார்க் அணிகள் போட்டியிட்ட நிலையில் போட்டி 1-1 என என சமநிலையில் நிறைவடைந்துள்ளது. ‘சி’ பிரிவில் டென்மார்க் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா ஒரு தோல்வி, ஒரு சமனிலையுடன் 1 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

அதனையடுத்து இரண்டாவது போட்டி பிரான்ஸ் மற்றும் பெரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நிலையில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக அர்ஜென்டினா மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் பாதி ரேத்தில் இரு அணிகளும் எந்நத கோலினையும் போடவில்லை. அடுத்து 2வது பாதி நேரத்தில் குரோஷியா 3கோல்களைப் போட்டதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.