ஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல்லுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கா வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கறுப்பு கொடிகளை வீசியும், கறுப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற நிலையில் அவர்களை கைது செய்த காவல்துறையினார் பின்னர் விடுதலை செய்திருந்தனர்.
இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி காவல்துஐறயினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது