192
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை சந்தித்துள்ளனர். புறக்கோட்டையில் அமைந்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, ஜோன் அமரதுங்க, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அநுராதா ஜயரத்ன, திலங்க சுமதிபால ஆகியோரே இவ்வாறு விமல் வீரவன்சவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love