Home இந்தியாகேரளாவில் காணாமல் போன 11 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சென்று விட்டார்களா?

கேரளாவில் காணாமல் போன 11 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சென்று விட்டார்களா?

by admin


கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் இரு குடும்பங்களிலிருந்து 11 பேர் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல்போனவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்கு சென்றுள்ளார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து காணாமல் போன இந்த 11 பேரில் குழந்தைகளும் இருப்பதாகவும் இதுகுறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது இரு ஆண்டுகளுக்கு முன்பே காசர்கோடு மாவட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் காணாமல் போனது கண்டறியப்பட்டு அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.

அதேபோன்று கடந்த வருடம் கேரளாவில் கண்ணூரைச் சேர்ந்தவர் ஷாஜகான் என்பவர் ,ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் டெல்லி வந்தபோது கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More