அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் படகுகளால், காப்பாற்றப்பட்ட புலம்பெயர்ந்தோர் இத்தாலியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றியோ சல்வினி ( Matteo Salvini ) தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரின் சட்டவிரோத பயணங்களினை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊக்குவித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, புலம்பெயர்ந்தோர் விவகாரம் தொடர்பில் இத்தாலியின் சுமையை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உடன்படிக்கையை அவர் பாராட்டியுள்ளார்.ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இத்தாலியை சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Matteo Salvini