169
நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமை காரணமாக முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு நட்டான்கண்டல் வைத்தியசாலை வாரத்தின் பல நாட்களுக்கு மூடப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றது. இதனால் நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மருத்துபீடம் செல்லும் மாணவர்கள் வைத்தியர்கள் ஆனதும் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றமை காரணமாகவே இத்தகைய நிலைமை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு மாவட்டம் ஒன்றில் வருடத்திற்கு ஐந்து முதல் 11 வரையான வைத்தியர்கள் உருவாகின்ற நிலையில் தொடர்ந்தும் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றன. இதேவேளை இங்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் விரும்பி வந்து கடமை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
இவைகள் போன்ற காரணத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் வைத்தியசாலை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிரந்தர வைத்தியர் இன்றி இருக்கின்றது.
இந்தப் பிரதேச மக்கள் வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும் நாட்களில் தமது பிரதேசத்தில் இருந்து வெகு தொலைவுக்குச் சென்று மல்லாவி வைத்தியசாலையிலேயே தமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர். எனவே நிதர்ந்தர வைத்தியர் ஒன்றை நியமித்து தருமாறு பிரதேச மக்கள் கோருகின்றனர்.
Spread the love