குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க இந்த நூலை எழுதியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்த தலைமைத்துவ பண்பு மட்டுமல்லாது அவருக்குள் இருந்த சமூக விரோத பண்புகள் தொடர்பாகவும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனுக்குள் மறைந்திருந்த உளவியல் ரீதியான பண்புகளை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளதாக உளவியல் மருத்துவ நிபுணர் சரத் படுவாவல குறிப்பிட்டுள்ளார்.