203
பிரியதர்ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். அண்மைய நாட்களில் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்களில் இயக்கங்களில் உதயநிதி நடிக்கிறார். பிரியதர்ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் மேற்கொள்ளுகிறார்.
படப்பிடிப்புகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆரம்பமாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் இறுதியில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்தப் படத்தில் விஷால் தன் மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது அதே கதையில் உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.
Spread the love