205
ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார்.
அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ள இந்தப் படம், 2009இற்குப் பின்னரான சூழலில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கையை பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஈழத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தப் டபம் ஈழப் பிரச்சினை குறித்த புரிதலை தெளிவாக்கும் ஒரு கலைப்படைப்பு என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த தமிழ் சிங்கள கலைஞர்களுடன் தமிழகம், இந்திய கலைஞர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love