Home இலங்கைபுலிகளின் ஆளுகைக்குள் குற்ற செயல்கள் குறைவாக இருந்த ஆதங்கத்தில் கூறி இருக்கலாம்….

புலிகளின் ஆளுகைக்குள் குற்ற செயல்கள் குறைவாக இருந்த ஆதங்கத்தில் கூறி இருக்கலாம்….

by admin

வி. மணிவண்ணன்….

விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த போது குற்ற செயல்கள் குறைவாக இருந்தது. அந்த ஆதங்கத்தில் இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறி இருக்கலாம் என என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. போதை பொருள் கடத்தல்கள் , வாள் வெட்டு சம்பவங்கள் , பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து உள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த போது இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெறவில்லை. அவர்களின் ஆளுகையின் போது யாழ்ப்பணத்தில் வாழ்ந்தவர். அக்கால பகுதியில் இருந்தது போன்று தற்போது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஆதங்கத்தில் அவ்வாறு தெரிவித்து இருக்கலாம்.

விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை பலருக்கும் உண்டு அது தெற்கில் உள்ளவர்களுக்கும் உண்டு அதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More