இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2 – ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது எனவும் ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது எனவும் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை ஜூலை 17-ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை :

Jul 5, 2018 @ 03:09

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது எனவும் ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது எனவும் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap