Home இலங்கைகிராமத்து மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலைக்கு பெற்றோர் நன்றி தெரிவிப்பு ( படங்கள் இணைப்பு )

கிராமத்து மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலைக்கு பெற்றோர் நன்றி தெரிவிப்பு ( படங்கள் இணைப்பு )

by admin

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அதக பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றது. இதல் நாடாளவிய ரீதியிலிருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.  இந்தப் போட்டியில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அதக பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களில் இருபது வயது பெண்கள் பிரிவில் 63 கிலோ பிரிவில் றஜீபா புவனரஞ்சன் வெண்கலப் பதகத்தையும்,பதினேழு வயது பெண்கள் 75 கிலோ பிரிவில் துர்க்கா சுரேந்திரன் வெண்கலப் பதகத்தையும், 17 வயது ஆண்கள் 50 கிலோ பிரிவில் மோகனதாஸ் பாவலன் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

பல்வேறு வசதிவாய்ப்புகள் அற்ற நிலையில் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பாடசாலையிலிருந்து சென்ற தங்களின் பிள்ளைகளை சாதனையாளர்களாக மாற்றிய அதிபா், ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More